சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் புதிய சாதனை


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் புதிய சாதனை
x

Image Courtesy : @CincyTennis twitter

தினத்தந்தி 19 Aug 2023 12:23 AM GMT (Updated: 19 Aug 2023 11:04 AM GMT)

சர்வதேச டென்னிசில் ஒரு வீரருக்கு எதிராக தோல்வின்றி அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்தார்.

சின்சினாட்டி,

மற்றொரு ஆட்டத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் மான்பில்சை ஊதித்தள்ளினார். அவருக்கு எதிராக ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 19-வது வெற்றி இதுவாகும்.

இதன் மூலம் சர்வதேச டென்னிசில் ஒரு வீரருக்கு எதிராக தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்தார். இதற்கு முன்பு ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டுக்கு எதிராக 18-0 என்ற கணக்கில் வென்றதே சாதனையாக இருந்தது.

மற்ற ஆட்டங்களில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டேனில் மெட்விடேவையும், போலந்து வீரர் ஹுபெர்ட் ஹர்காக்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாசையும் (கிரீஸ்), ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் புர்செல் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் வாவ்ரிங்காவையும் (சுவிட்சர்லாந்து) வீழ்த்தினர். மேலும் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்), அலெக்ஸ் போப்ரின் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்று கால்இறுதியை எட்டினர்.


Next Story