அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்: வரலாறு படைத்த ரோகன் போபண்ணா


ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா கிரான்ஸ்லாம் பட்டம் வென்றார்.

சிட்னி,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் இறுதி சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா) - மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி இணையை சந்தித்தது.

1 மணி நேரம் 39 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 7-6, (7-0), 7-5 என்ற செட்களில் மோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகன் போபண்ணா படைத்துள்ளார். அவர் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

இதற்கு முன்பாக 40 வயதில் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இரட்டையர் சுற்றில் பட்டம் வென்ற நெதர்லாந்து வீரர் ஜீன் - ஜுலியன் ரோஜர் என்ற வீரரே அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். தற்போது, அந்த சாதனையை முறியடித்து ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 43 வயதான ரோகன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.


Next Story