சினிமா செய்திகள்
காலா படத்தின் பாடல்கள் மே- 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை மே.9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். #kaalaa #Rajinikanth
சென்னை,

'கபாலி' படத்தைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா'. 'காலா' படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

 படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், வரும் மே 9 ஆம் தேதி காலா படத்தின் இசை வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.