சினிமா செய்திகள்
ஊர்வலமாக போவது போல்நடிகர் விஜய் படம், இணையதளத்தில் வெளியானது

நடிகர் விஜய் ஊர்வலமாக போவது போன்ற படம் இணையதளத்தில் வெளியானது.
விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக ராதாரவி நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்றது.

படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில், இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுடன், ‘பைக்’கில் விஜய் ஊர்வலமாக போவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்கள்.

அந்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து, இணையதளத்தில் வெளியிட, அது ‘வைரலாக’ உலா வருகிறது. அதைப்பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.