சினிமா செய்திகள்
படுக்கைக்கு அழைப்பது குறித்து காலா பட நடிகை ஹூமா குரேஷி கருத்து

படுக்கைக்கு அழைப்பது குறித்து காலா பட நடிகை ஹூமா குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.
கேன்ஸ்

71 வது கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு நடிகை  ஹூமா குரேஷி    #MeToo , கருத்து சுதந்திரம் இந்தியாவில் பெண்கள், அவரது சொந்த  அனுபவங்கள் ,குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"இந்தியாவிலும்  உலகின் மற்ற இடங்களிலும்   பெண்கள்  துன்புறுத்துதலுக்கு எதிராக பேசும் அமைப்பு உருவாகி விட்டது.. பெண் அவளுடைய அறநெறி பற்றி, அவள் அணிந்திருக்கு ஆடைகள்  பற்றியும் அத்தகைய அனைத்து விஷயங்கள் குறித்து  நான் நியாயமற்றது என்று நினைக்கிறேன் "

சிறுமிகள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யபடும் சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன இதற்கு "சட்டங்கள் மட்டுமே உதவ முடியாது, மாற்றம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் தன்னார்வமாகவும் இருக்க வேண்டும். 

 "பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் உள்ளது என தெரிவித்து உள்ளார்.நானும் இதை சந்தித்து உள்ளேன் என்று கூறினார்.