சினிமா செய்திகள்
‘பத்மாவத்’ சர்ச்சைக்கு பிறகு தீபிகா படுகோனேவுக்கு படங்கள் இல்லை

தீபிகா படுகோனேவுக்கு படங்கள் இல்லை, இந்தி திரையுலகினர் நிறைய காரணங்கள் சொல்கிறார்கள் அதில் ஒன்று திருமணம் என்று பேசுகிறார்கள்.
தீபிகா படுகோனேயின் ‘பத்மாவத்’ படம் சர்ச்சைகளில் சிக்கி ஜனவரியில் திரைக்கு வந்தது. ரூ.215 கோடியில் உருவாக்கப்பட்டு ரூ.585 கோடி வசூலித்தது. இந்த படத்துக்கு பிறகு புதிய கதைகள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு இந்தி திரையுலகினர் நிறைய காரணங்கள் சொல்கிறார்கள். அதில் ஒன்று திருமணம்.

தீபிகா படுகோனேவும் இந்தியில் பிரபல நடிகராக இருக்கும் ரன்வீர் சிங்கும் பல வருடங்களாக காதலிக்கின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதால் சினிமாவை விட்டு தீபிகா படுகோனே தற்காலிகமாக ஒதுங்கி இருக்கிறார் என்கின்றனர். இன்னும் சிலரோ படப்பிடிப்பில் தீபிகா படுகோனே கழுத்திலும் தோளிலும் காயம் ஏற்பட்டதால் புதிய படங்களை ஏற்காமல் இருக்கிறார் என்று பேசுகிறார்கள்.

படங்களில் நடிக்காததற்கு நல்ல கதையும் கதாபாத்திரமும் அமையாததுதான் என்ற கருத்தும் நிலவுகிறது. பத்மாவத் படத்துக்கு பிறகு அதே மாதிரி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடினார். ஆனால் வந்ததெல்லாம் கதாநாயகனையே முன்னிலைப் படுத்தின. அதனால்தான் படங்களுக்கு இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்கிறார்கள்.

இன்னொரு காரணமாக சம்பளத்தை சொல்கிறார்கள். பத்மாவத் படத்துக்கு பிறகு சமபளத்தை கணிசமாக ஏற்றியதாகவும் அவர் கேட்கும் தொகையை கொடுக்க பெரிய பட நிறுவனங்கள் சம்மதிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். இவற்றில் ஏதோ ஒரு காரணத்தால்தான் புதிய படங்களில் அவர் நடிக்காமல் இருக்கிறார் என்று பேசப்படுகிறது.