சினிமா செய்திகள்
ரூ.150 கோடிக்கு விலைபோன நயன்தாரா படம்

நயன்தாராவின் சமீபத்திய படங்கள் நல்ல வசூல் பார்க்கின்றன.
நயன்தாராவின் சமீபத்திய படங்கள் நல்ல வசூல் பார்க்கின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க போராடும் கலெக்டராக நடித்து இருந்த அறம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பிறமொழிகளிலும் இந்த படத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடி பிடித்து நடித்து வருகிறார்.

கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவை மட்டும் வைத்து தயாராகி வரும் கோலமாவு கோகிலா படத்தின் ஒரு பாடல் காட்சியை வெளியிட்டனர். நயன்தாராவை நகைச்சுவை நடிகர் யோகிபாபு காதலிப்பது போன்ற இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி சரித்திர படமும் ரிலீசுக்கு தயாராகிறது.

இதில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியிடும் உரிமை ரூ.150 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளனர்.