சினிமா செய்திகள்
காலா திரைப்படம் பற்றி ரசிகர்கள் கருத்து

ரஜினி நடித்த காலா திரைப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். #Kaala #Rajinikanth
சென்னை

பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது. சென்னை மற்றும்  புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

இந்த சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதேபோல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

சென்னையில் ரஜினியின் காலா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலா திரைப்படம் பற்றி ரசிகர்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். படத்தை பார்த்தை ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட நன்றாக இருப்பதாக கூறினர். ரஜினிகாந்தின் காலா அவருக்கு ஒரு ப்ளாக்பாஸ்டர் படமாக, சூப்பர் டூப்பர் படமாக அமையும் என கூறி உள்ளனர்.