சினிமா செய்திகள்
கணவர் கள்ளத் தொடர்பு: டி.வி. நடிகை தேஜஸ்வினி தற்கொலை

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர், தேஜஸ்வினி
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர், தேஜஸ்வினி(வயது 25). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பவன் குமார் என்பவரை காதலித்து பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரும் தங்களின் திருமணத்தை ஏற்காததால், அவர்கள் இருவரும் துபாய்க்கு சென்றுவிட்டனர். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

பெற்றோர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு தேஜஸ்வினியும், பவன் குமாரும் ஆந்திராவுக்கு திரும்பி வந்தனர். பவன் தனது பெற்றோர்கள் மற்றும் மனைவியுடன் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

பவன்குமாருக்கும், தேஜஸ்வினிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில், தேஜஸ்வினி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பவன் ஊரில் இல்லாத நேரத்தில், தேஜஸ்வினி தனது படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டார். மதியம் சாப்பிட வருமாறு மாமியார் கதவை தட்டியும், அவர் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து பார்த்தபோது, தேஜஸ்வினி தூக்கில் பிணமாகத் தொங்கினார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தேஜஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்வதற்கு முன்பு தேஜஸ்வினி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பவன் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக தேஜஸ்வினி கடிதத்தில் தெரிவித்துள்ளார். பவன் தன்னை மனரீதியாக மிகவும் சித்ரவதை செய்ததாகவும் தேஜஸ்வினி குறிப்பிட்டுள்ளார்.