சினிமா செய்திகள்
14 வருட எதிர்பார்ப்பு : இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ‘இன்கிரிடிபிள்-2’

2004-ம் ஆண்டு பிராட் பிரிட் இயக்கத்தில் வெளியான ‘இன்கிரிடிபிள்’ திரைப்படம் பிரமாதமாக ஓடியது.
கார்ட்டூன் ரக திரைப்படம் என்பதால் வயது வித்தியாசமின்றி, இன்கிரிடிபிள் திரைப்படத்திற்கும், அதன் கதாபாத்திரங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதன் அடுத்த பாகம் எப்போது வெளியாகும்..? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இல்லாமல் இல்லை. அதற்கான விடை 14 வருட காத்திருப்பிற்கு பிறகு, இப்போது (2018) கிடைத்திருக்கிறது. 14 வருடங்களுக்கு பிறகு ஹாலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்த வந்திருக்கும், ‘இன்கிரிடிபிள்’ திரைப்படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள் இதோ...

இன்கிரிடிபிள்-2 திரைப்படத்தை அடுத்த ஆண்டுதான் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால் அடுத்தவருடம் ‘டாய் ஸ்டோரி-4’ திரைப்படம் வெளிவர இருப்பதால், இந்த வருடமே திரைக்கு கொண்டுவந்துவிட்டனர்.

திரைப்படத்தின் இயக்குனர் பிராட் பிரிட் நல்ல கதை கிடைக்காத பட்சத்தில் இன்கிரிடிபிள்-2 படத்தை பற்றி யோசிக்கக் கூடாது என்ற முடிவில் தீர்க்கமாக இருந்திருக்கிறார். அதனால்தான் இவ் வளவு காலதாமதமாம்.

முதல் பாகத்தில் வில்லனின் காதலியாக நடித்து, குண்டு ஹீரோவை மயக்கும் ‘மிராஜ்’ கதாபாத்திரத்தில் நடித்தவர், எலிசெபத் பென்னா. இவர் 2014-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதனாலும் திரைப்பட தயாரிப்பு பணிகள் மந்தமாகிவிட்டன. நடிகையின் இறப்பிற்கு பிறகு மிராஜ் கதாபாத்திரம் திரைப்படத்தில் இருக்கிறதா..? இல்லையா..? என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.

width="199" />ஒரு படத்தின் தொடர்ச்சி, இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டாவது பாகமாக வெளிவருவது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு ‘மான்ஸ்டர் இன்க்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 13 வருட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வந்ததாம்.

திரைப்படத்தில் மிஸ்டர். இன்கிரிடிபிளின் நண்பனாக வரும் ‘புரோசன்’ ஐஸ் மனிதனின் கதாபாத்திரத்தை வலுவூட்ட, அவெஞ்சர் படைகளை ஒன்று சேர்த்த ஜாக்சனை சேர்த்திருக் கிறார்கள். அவரும் தன்னுடைய பங்கிற்கு அசத்தியிருக்கிறார்.

சூப்பர் ஹீரோ படைகளுக்கு சிவப்பு, கருப்பு வண்ணத்தில் உடை தயாரித்து தரும் எட்னா என்ற கதாபாத்திரம், நிஜ உடை தயாரிப்பாளர் எடித் ஹெட் என்பவரை பார்த்து உருவாக்கப்பட்டது.

இன்கிரிடிபிள் என்று நமக்கு தெரிந்த இந்த திரைப்படத்தின் உண்மையான பெயர் ‘இன்வின்சிபிள்’. ஆனால் இன்கிரிடிபிள் என்ற பெயரே பிரபலமானதால், அதையே திரைப்பட பெயராக மாற்றி விட்டனர்.

width="143" />இன்கிரிடிபிள் திரைப் படத்தில் வரும் சூப்பர் ஹீரோக் களின் சக்தி களை கூர்ந்து கவனித்தால், ‘பென்டாஸ்டிக் 4’ திரைப்படம் ஞாபகத்திற்கு வரும். நெருப்பு மனிதன், உடல் நீளும் கதாநாயகி, கற்பாறை மனிதன் என இன்கிரிடிபிள் திரைப்படத்தில் வரும் அனைத்தும் கதாபாத்திரங்களும் ‘பென்டாஸ்டிக் 4’ திரைப்படத்தின் சாயல்களே.

இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஹீரோவாக கலக்க இருக்கும் ‘ஜாக் ஜாக் பாய்’ என்ற பொடியனுக்கு 17 வகையான சக்திகள் இருக்கிறதாம். நிஜ உருவம் போல ஏராளமான எண்ணிக்கையில் காட்சியளிப்பது, பேயாக மாறுவது, நெருப்பு மனிதாக எரிவது, லேசர் கண்கள், அசாத்திய வலிமை, தண்ணீரில் மிதப்பது, பறப்பது, மின்சாரத்தை உண்டாக்குவது, சுவர்களுக்கு நடுவே உட்புகுந்து செல்வது, இரும்பு மனிதனாக மாறுவது, மிமிக்ரி செய்வது... என ஏராளமான அபூர்வ சக்திகள் பெற்றவனாக கலக்குகிறான். கிட்டத்தட்ட இரண்டாம் பாகத்தின் கதாநாயகன் என்றே அவனை சொல்லும் அளவிற்கு பலம் வாய்ந்த சக்திகளோடு உருவாக்கியிருக்கிறார்கள்.