சினிமா செய்திகள்
‘‘கணவர் என்னை கொல்ல முயன்றார்’’–நடிகை சோபியா ஹயாத்

கணவர் தன்னை கொலை செய்ய முயன்றதாக நடிகை சோபியா ஹயாத் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.
இந்தி படங்களில் நடித்துள்ளவர் சோபியா ஹயாத். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களையும் பகிர்ந்து வருகிறார். திடீரென்று கன்னியாஸ்திரியாகி விட்டதாக அறிவித்தார். பின்னர் ருமேனியாவை சேர்ந்த விளாட் ஸ்டானஸ்கு என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து விட்டார். விளாட் தன்னை கொலை செய்ய முயன்றதாக இப்போது போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சோபியா ஹயாத் கூறியதாவது:–

‘‘விளாட் ஒரு மோசடி பேர்வழி. என்னை ஏமாற்றி விட்டார். உன் சொத்து உயிலில் எனது பெயரை எழுதி இருக்கிறாயா’ என்று என்னிடம் கேட்டார். உண்மையாக காதலிப்பவர்கள் அப்படி கேட்டு இருக்க மாட்டார்கள். எங்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது என்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். 

திருமணத்துக்கு அணிவித்த மோதிரத்தை ரூ.1.5 லட்சத்துக்கு விற்று விட்டார். என்னுடன் வாழ்ந்த போது சொந்த வீட்டிலேயே திருட முயற்சி செய்தார். அவருக்கு கடன் இருந்துள்ளது. ஆனால் அதை மறைத்து தன்னை ஒரு பிரபலம்போல் காட்டி என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். விளாட் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’

இவ்வாறு சோபியா ஹயாத் கூறினார்.