சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து

இந்த ஆண்டு பிறந்த நாளில் கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து தயாராக இருக்கிறது.
விஷால் நடிப்பில் 2005–ம் ஆண்டு வெளியான படம், ‘சண்டக்கோழி’. இந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அனைத்து பாடல்களும் ‘ஹிட்’ ஆனது. இந்த படம்தான் விஷாலுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. ‘சண்டக்கோழி–2’ படத்தையும் லிங்குசாமியே டைரக்டு செய்கிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். படத்தை ஆயுதபூஜை தினத்தில் (அக்டோபர் 18) திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள். 

விஷாலுடன், கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக ஜோடியாக நடிக்கிறார். எனவே இந்த படத்தை அவர் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி, படம் திரைக்கு வரும் முந்தைய நாளான அக்டோபர் 17–ந்தேதி, கீர்த்தி சுரேசுக்கு பிறந்தநாள். எனவே இந்த ஆண்டு பிறந்த நாளில் கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து தயாராக இருக்கிறது.