சினிமா செய்திகள்
ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது - நடிகர் கார்த்தி

ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என நடிகர் சங்க துணைப்பொதுச்செயலாளர் நடிகர் கார்த்தி கூறினார். #ActorKarthi #Srireddy
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கில் கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த ரசிகர்களை கார்த்தி, பாண்டிராஜ் உள்ளிட்ட படக் குழுவினர் சந்தித்தனர்.  

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் கார்த்தி கூறியதாவது:-

ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது; நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

முன்னதாக பேசிய கார்த்தி குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று கவனம் செலுத்தி திட்டத்தை வகுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார்.