சினிமா செய்திகள்
தொடர் பாலியல் புகார் ஸ்ரீரெட்டி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தெலுங்கு- தமிழ் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #SriReddy
சென்னை

பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றி படுக்கையில் பயன்படுத்தியவர்கள் பெயர்களை முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தெலுங்கு நடிகர்கள் நானி, விவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், இயக்குனர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் ஆகியோர் இவரது செக்ஸ் புகாரில் சிக்கினர்.

இப்போது தமிழ் திரையுலகினரை குறிவைத்துள்ளார். நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோரை சர்ச்சையில் இழுத்து இருக்கிறார். இது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘‘பட வாய்ப்பு தருவதாக என்னை படுக்கையில் பயன்படுத்திவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கிறேன். பிரபலங்கள் அழைத்ததும் ஏன் படுக்கைக்கு சென்றீர்கள் என்று என்னிடம் கேட்கப்படுகிறது. சினிமா என்பது கவர்ச்சி உலகம். அழகையே இங்கு முக்கியமாக பார்க்கிறார்கள். நான் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறேன். உணவு, வாடகை மற்றும் வேறு செலவுகளுக்கு பணம் தேவைபடுவதால் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உடன்பட வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதால் இப்படி செய்தேன் கூறினார்.

தற்போது பலருக்கும்  நடிகர் ஆதி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி. "அவர் அடிக்கடி ஐதராபாத் வருவார். எனக்கு தமிழில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறுவார். எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. எனக்கு உதவி செய்வதாக கூறி.. பின்னர் செய்யவில்லை" என கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது நடிகர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

நடிகை ஸ்ரீரெட்டி, ஆந்திராவில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் அளித்து பணம் பறித்துள்ளார். சென்னையில் அது போன்று திரை உலகை சேர்ந்தவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார்.

பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது. அவரது பேட்டி விபச்சாரத்தை ஒப்புக் கொண்டது போல் உள்ளது. எனவே விபச்சார சட்ட பிரிவின் கீழ் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.