சினிமா செய்திகள்
அமெரிக்க டாக்டருடன் திருமண வதந்தி ; கோபம் அடைந்த நடிகை தமன்னா

தன்னுடைய திருமண வதந்தி குறித்து அறிந்த தமன்னா கோபம் அடைந்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். #Tamannaah

நடிகை தமன்னா குயின் பட தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளத்தாக இன்று தகவல் பரவியது.

இதைப் பார்த்து அதிர்ச்சியான நடிகை தமன்னா டுவிட்டரில் இது பற்றி கோபமாக விளக்கம் கொடுத்துள்ளார்.

முன்னதாக அவரின் பெயர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் அடிப்பட்டது. அதன் பிறகு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை தமன்னா காதலிப்பதாக சில காலம் கிசுகிசுக்கப்பட்டது.

ஒரு நாள் நடிகர், மறுநாள் கிரிக்கெட் வீரர், தற்போது டாக்டர். இந்த வதந்திகளை எல்லாம் பார்த்தால் நான் கணவரை தேடும் பணியில் இருப்பதாக தெரிகிறது. காதல் பிடிக்கும் என்றாலும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஆதாரமில்லாத செய்திகளை ஏற்க முடியாது என்று தமன்னா டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

நான் தற்போது சிங்கிளாக, சந்தோஷமாக உள்ளேன். என் பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை தேடவில்லை. நான் தற்போது ரொமான்ஸ் செய்யும் ஒரே விஷயம் என் சினிமாவை தான். நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் நிலையில் இது போன்ற வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை என தமன்னா நொந்துள்ளார்.

நான் திருமணம் செய்தால் அதை நிச்சயம் அனைவருக்கும் சொல்லிவிட்டுத் தான் செய்வேன். நான் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இந்த வதந்திகள் எல்லாம் யாரோ ஒருவருடைய கற்பனையே என்றும் அனைத்து தேவையில்லாத பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா.

pic.twitter.com/rpmJ7wc6LQ — Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 27, 2018