சினிமா செய்திகள்
நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததாக போலீஸ் மீது நடிகை சுருதி பாலியல் புகார்

நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததாக போலீஸ் மீது நடிகை சுருதி பாலியல் புகார் கூறி உள்ளார்.
கோவை:

திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், கோடீஸ்வர இளைஞர்களை ஏமாற்றியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த துணை நடிகை சுருதி. அவரது தாயார் சித்ரா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நடிகை சுருதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை. அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள். சைபர்கிரைம் போலீசார் என்னையும், எனது தாயாரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது எங்களை ஏதும் பேசவிடாமல் நாங்கள் சொல்வதை எதையும் கேட்காமல், நாங்கள் சொல்வது போல் அவர்களே எல்லாவற்றையும் எழுதி கொண்டனர்.

விசாரணையின் போது என்னை நிர்வாணமாக்கி, பெண் போலீசை வைத்து போட்டோ எடுத்து கொண்டனர். அதனை இணைய தளத்தில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று மிரட்டினர். மேலும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால் கொஞ்சம், கொஞ்சமாக இந்த வழக்கில் இருந்து உன்னை விடுவித்து விடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும் என்னை விசாரிக்க வரும் போலீசாரும் பாலியல் ரீதியாக எனக்கு துன்புறுத்தல்களை கொடுத்து வந்தனர். போலீஸ் விசாரணை முடிந்ததும் நீதிபதியிடம் இது குறித்து நான் புகார் அளித்து உள்ளேன். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.