சினிமா செய்திகள்
இம்மாதம் இறுதியில் ‘நரகாசுரன்’

‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் டைரக்‌ஷனில் அடுத்து, ‘நரகாசுரன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.
அரவிந்தசாமி-ஸ்ரேயா கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். ஆத்மிகாவும், கிட்டியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பற்றி டைரக்டர் கார்த்திக் நரேன் கூறுகிறார்:-

“கதைப்படி, அரவிந்தசாமி புதிதாக திருமணம் ஆனவர். அவருடைய மனைவி ஸ்ரேயா. இவர்கள் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. பெரும்பகுதி படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று 41 நாட்களில் முடிவடைந்தது.

படம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. எந்த காட்சிகளும் நீக்கப்படாமல், படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

“நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததால்தான், 41 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க முடிந்தது” என்கிறார், டைரக்டர் கார்த்திக் நரேன்.