சினிமா செய்திகள்
நடிகையின் நிர்வாண படங்களை வெளியிட்டவருக்கு சிறை

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் நிர்வாண படங்களை வெளியிட்டவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ். இவர் எக்ஸ் மேன் பஸ்ட் கிளாஸ், அமெரிக்கன் ஹசில், செரீனா, எக்ஸ் மேன் டேஸ் ஆப் பியூச்சர் பாஸ்ட், ஜாய், பாசஞ்சர்ஸ், ரெட் ஸ்பாரோ உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை சேர்த்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஜெனிபர் லாரன்சின் இணையதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. 

அதற்குள் இருந்த நிர்வாண படங்களை ஒரு ஆசாமி திருடி வெளியிட்டு விட்டான். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஜெனிபர் லாரன்ஸை அதிர்ச்சியடைய வைத்தது. தனது அந்தரங்க படங்கள் வெளியானது குறித்து ஜெனிபர் லாரன்ஸ் கூறும்போது, ‘‘என்னை பலர் சேர்ந்து கற்பழித்ததுபோல் இருக்கிறது’’ என்றார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். 

போலீசார் விசாரணை நடத்தி ஜெனிபர் கணக்கை ஹேக் செய்து நிர்வாண படங்களை எடுத்த ஜார்ஜ் ஹரோபனோ என்ற 26 வயது இளைஞரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நிர்வாண படங்களை திருடி வெளியிட்டது கடுமையான குற்றம் என்றும், அவரை 16 மாதங்கள் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அரசு வக்கீல் வாதாடினார். 

ஆனால் ஜார்ஜ் ஹரோபனோவுக்கு நீதிபதிகள் 8 மாதம் சிறை தண்டனை அளித்தும் தண்டனை காலம் முடிந்த பிறகு மேலும் 3 வருடங்கள் சில நிபந்தனைகளுடன் வெளியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்கள்.