சினிமா செய்திகள்
32 நாட்களில் முடிவடைந்த படம் ‘ஏகாந்தம்’

‘ஏகாந்தம்’ என்றால் பேரானந்த நிலை என்று பொருள். எங்கள் படத்தின் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான டைட்டில், இது என்று கூறுகிறார், ‘ஏகாந்தம்’ படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளருமான ஆர்செல் ஆறுமுகம்.
‘ஏகாந்தம்’  படத்தை பற்றி டைரக்டரும், தயாரிப்பாளருமான ஆர்செல் ஆறுமுகம் மேலும் கூறுகிறார்:-

“நகரத்தையும், நாகரீகத்தையும் தேடி சொந்த கிராமத்தை விட்டு புலம் பெயரும் மனிதர்கள் உறவு, பண்பாடு, மனிதநேயம் போன்ற அடையாளங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த கருவை மையமாக வைத்து கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் கதை சொல்லியிருக்கிறேன்.

50-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள விவாந்த் கதாநாயகனாகவும், பரதநாட்டியம்-குச்சிப்பிடி கலைஞர் நீரஜா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். கொடைக்கானல் அருகில் பண்ணைக்காடு கிராமத்தில் முகாமிட்டு, 32 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து இருக்கிறோம்.

படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழு, ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.”