ஆஸ்கார் விருது போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய “ஹோம்பவுண்ட்” திரைப்படம்

ஜாதியும் மதமும் இந்தியாவில் ஆபத்தாக மாறி மக்களின் வாழ்க்கையை சிதைக்கிறது என்பதை ‘ஹோம்பவுண்ட்’ படம் காட்டுகிறது.;

Update:2026-01-06 21:13 IST

மத்திய பாஜக ஆட்சியில் 2020ம் ஆண்டில் வட இந்திய மாநிலங்களின் அவலநிலையையும் படித்தும் வேலையின்றி அல்லல்படும் இளைஞர்களின் தவிப்பையும் புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட இன்னல்களையும் சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட இந்தி மொழி திரைப்படம் ‘ஹோம்பவுண்ட்’.

சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் போட்டிக்கான 15 படங்கள் கொண்ட பட்டியலில் ‘ஹோம்பவுண்ட்’ தேர்வாகியுள்ளது. உண்மை சம்பவம் ஒன்றை 2020ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பஷாரத் பீர் என்பவர் செய்தி கட்டுரையாக எழுதிய நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் நீரஜ் கய்வான் ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

குறிப்பாக, வடமாநிலங்களில் தலித் குடும்பங்களும் முஸ்லிம் குடும்பங்களும் அரசாங்கத்தாலும் சமூகத்தாலும் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள்; அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதை ‘ஹோம்பவுண்ட்’ படத்தில் இரண்டு ஹீரோ கதாப்பாத்திரங்கள் மூலம் விவரித்திருக்கிறார் இயக்குநர் நீரஜ் கய்வான்.

ஜாதியும் மதமும் இந்தியாவில் எவ்வளவு ஆபத்தாக மாறி மக்களின் வாழ்க்கையை சிதைக்கிறது என்பதை ‘ஹோம்பவுண்ட்’ படம் உலகிற்கு காட்டுகிறது.

இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 26 அன்று திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகும் முன், இது கேள்ஸ் திரைப்பட விழா மற்றும் பொராண்டோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில், ஆஸ்கர் ரேசில் பல்வேறு கட்டங்களை கடந்த ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த சுற்றில் ‘ஹோம்பவுண்ட்’ உடன் சேர்ந்து, பாலஸ்தீன் 36, தி சீக்ரெட் ஏஜென்ட், நோ அதர் சாய்ஸ் உள்ளிட்ட 15 படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இருந்து 5 படங்கள் மட்டுமே இறுதிப்பரிந்துரைக்கு தேர்வாகும்.

ஆஸ்கார் விருது பட்டியல் வரும் 22ம் தேதி அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்