பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , கமல் எனது நண்பர்- ரஜினிகாந்த் பேட்டி

பிரதமர் மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என்றும், கமல்ஹாசன் எனது நண்பர் அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

Update: 2018-12-03 10:00 GMT
சென்னை

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்துக்கு நல்ல தலைமை தேவை எனவும் தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது. 

தமிழர்கள் கடின உழைப்பாளிகள், அறிவாளிகள் தாங்கள் யார் என்பதை அவர்கள் மறந்து போய்  உள்ளனர்.

 அரசியலையும் சினிமாவையும் ஒருபோதும் தான் இணைத்து பார்த்ததில்லை.  பொழுதுபோக்கு விஷயமான சினிமாவில் அரசியல் கொண்டு வரக்கூடாது. சில படங்களில் அரசியல் வசனங்கள் இருப்பது கூட, வேண்டுமென்றே வைத்தது அல்ல. 

சினிமா நடிகர்கள், அரசியலில் வெற்றி பெற முடியும் என நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர்  சினிமாவில் இருந்து வருபவர்களுக்கு எம்ஜிஆர் ஒரு முன்னுதாரணம் ஆகும்.

ஜெயலலிதாவின் உறுதி, தன்னம்பிக்கையை பாராட்டியுள்ள ரஜினிகாந்த், ஆண்கள் நிறைந்த அரசியல் உலகில் தனித்து நின்றவர் ஜெயலலிதா என தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் எனது நண்பர்  அவரை அரசியல் போட்டியாக கருதவில்லை . 

பிரதமர் மோடி  நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்   அதற்காகவே, கடினமாக முயற்சித்து பல்வேறு செயல்களை செய்துவருகிறார். மக்களுக்கு சிறந்ததை கொடுக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார்.

இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை, மாற்று அரசியலை உருவாக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு . அதில் கவனமாக விளையாட வேண்டும் என  ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்