சினிமா செய்திகள்
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாச படம் எடுக்க முயன்ற நடிகை-கணவர் கைது

அமெரிக்காவில் ஆபாச பட நடிகை மற்றும் ஆபாச படம் எடுக்கும் இயக்குனர் 10 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ரஞ்சோ குகமோகாங்கா  பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜேசன் விட்னி (43) மெலிண்டா ஸ்மித் (35).

மெலிண்டா ஸ்மித் ஆபாச படங்களில் நடித்துள்ளார். அதே போன்று ஜேசன் விட்னி ஆபாச படங்கள் எடுப்பது, தயாரிப்பது, வெப் சீரியல் என பிரபல இயக்குனராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி இந்த தம்பதி சுமார் 10 வயதிற்கும் குறைவாக இருக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் தொடர்ந்து அவர்களின் வீட்டை போலீசார் கண்காணித்தனர். அதன் பின் இது குறித்து புலனாய்வாளர்கள் ரகசியமாக விசாரணை  மேற்கொண்டனர்.

அப்போது கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து, அவர்கள் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு ஆபாச படம் எடுப்பதற்கு தயாராக இருக்கும் பெட் மற்றும் லைட் செட்டப்புகள் இருந்துள்ளன.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வேறு யாரேனும் வீட்டில் இருக்கிறார்களா என்று சோதனை மேற்கொண்டனர்.

அதன் பின் இருவரையும் கைது செய்த போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை இவர்கள் தொடர்ந்து நான்கு மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முழு விசாரணைக்கு பின்னரே அனைத்து தகவல்களும் தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்