‘போதை ஏறி புத்தி மாறி’ ஒரேநாளில் நடக்கும் கதை

வாழ்க்கையின் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் மொத்த வாழ்க்கையையும் வேறொரு பாதைக்கு திசைதிருப்புவதாக அமைவதுண்டு. அப்படியொரு அத்தியாயத்தை பற்றி பேசுகிறது, ‘போதை ஏறி புத்தி மாறி’ படம்.

Update: 2019-04-18 22:30 GMT
இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் சந்துரு கே.ஆர். சொல்கிறார்:-

‘‘ஒரேநாளில் நடக்கும் கதை இது. போதைப் பழக்கம் நம்மில் சிலருடைய நம்பிக்கைகளையும், கனவுகளையும் குலைத்து அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. படத்தின் தலைப்பே மொத்த கதையையும் சொல்வதாக அமைந்துள்ளது. படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் பல திருப்பங்கள் படத்தில் உள்ளன.

குறும் படங்கள் வாயிலாக தன் திறமைகளை வெளிப்படுத்தி வரும் தீரஜ், இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ராதாரவி, சார்லி, சுவாமிநாதன், துஷாரா, ப்ராதாயினி, அஜய், மீரா மிதுன், மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் மொத்தம் 35 கதாபாத்திரங்கள் உள்ளன. பாலசுப்பிர மணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படத்தை தயாரிப்பவர், ஸ்ரீநிதி சாகர். மொத்த படப்பிடிப்பும் சென்னையில் நடந்துள்ளது. 28 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டோம். ஜூன் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.’’

மேலும் செய்திகள்