திரைக்கு வந்த மூன்றே வாரங்களில் ஓடிடியில்...தண்டோரா படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?

இந்தப் படம் ஓடிடியில் என்ன மாதிரியான வரவேற்பை பெறும் என்பதை பார்ப்போம்.;

Update:2026-01-12 01:09 IST

சென்னை,

கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பரிசாக 'தண்டோரா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், சிவாஜி, நவ்தீப், பிந்து மாதவி, ரவி கிருஷ்ணா மற்றும் நந்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்நிலையில், திரைக்கு வந்த மூன்றே வாரங்களில் ஓடிடிக்கு இந்த படம் வரவுள்ளது. தண்டோரா படத்தின் அதிகாரபூர்வ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வருகிற 14 முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஓடிடியில் என்ன மாதிரியான வரவேற்பை பெறும் என்பதை பார்ப்போம். 

Tags:    

மேலும் செய்திகள்