இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் சல்மான்கானுக்கு ரூ.403 கோடி சம்பளம்

இந்தி பிக்பாஸ் 13-வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் சல்மான்கானை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-06-25 23:30 GMT
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. முன்னணி கதாநாயகர்கள் இதனை தொகுத்து வழங்குகிறார்கள். இதில் பங்கேற்கும் நடிகர்-நடிகைகள் மேலும் பிரபலமாகிறார்கள். அவர்களுக்கு புதிய படவாய்ப்புகளும் வருகின்றன.

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். ஆரவ், ஹரிஷ் கல்யாண், ரெய்சா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கும் படங்கள் வந்தன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஏற்கனவே 2 சீசன்களில் வந்த கமல்ஹாசனே 3-வது பிக்பாஸ் சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியில் பிக்பாஸ் 13-வது சீசன் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி தொடங்குகிறது. இதனை தொகுத்து வழங்க நடிகர் சல்மான்கானை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவருக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசி உள்ளனர்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டு நாட்களுக்கு சல்மான்கானுக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் ரூ.31 கோடி என்று கூறப்படுகிறது. மொத்தம் 26 ‘எபிசோடு’கள் உள்ளன. இவற்றுக்கு சல்மான்கான் வாங்கும் மொத்த சம்பளம் ரூ.403 கோடி ஆகும். இந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான்கான் ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்