ஆசிரமத்தில் தங்கிய நித்யாமேனன்

“நான் ஒரு வாரம் ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். அங்கு மதத்தை பற்றி கற்றுக்கொள்ளவில்லை. என்னை பற்றி கற்றுக்கொண்டேன்.

Update: 2019-08-03 02:30 GMT
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான ‘ஐயன் லேடி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நித்யா மேனன். சைக்கோ என்ற இன்னொரு படத்திலும் நடிக்கிறார். இரண்டு மலையாள படங்களும் கைவசம் உள்ளன. நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் ஒரு வாரம் ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். அங்கு மதத்தை பற்றி கற்றுக்கொள்ளவில்லை. என்னை பற்றி கற்றுக்கொண்டேன். பாடங்களை கற்றுக்கொடுக்க நிறைய கல்லூரிகள் உள்ளன. ஆனால் மனிதர்களாகிய நம்மை பற்றி எந்த கல்லூரியிலும் சொல்லி கொடுப்பது இல்லை. நான் கதாபாத்திரங்களுக்காக முன்கூட்டி பயிற்சி எடுத்து மெனக்கடமாட்டேன்.

ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்படாமல்தான் நடிப்பேன். படப்பிடிப்பு அரங்குக்கு சென்று அவர்கள் கொடுக்கும் உடையை அணிந்ததுமே நித்யாமேனன் என்பதை மறந்து அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவேன். சினிமாவில் பொதுவாக நடிக்க வேண்டிய காட்சிகள், வசனம் போன்றவற்றை கடைசி நிமிடத்தில் கொடுப்பார்கள்.

சில நேரம் படப்பிடிப்பு இன்று நடக்கிறது என்றால் காலையில் கதை வசனத்தை தருவார்கள். கதையை கேட்கும்போதே கதாபாத்திரம் என் நினைவில் நின்றுவிடும். அதோடு உணர்வுப்பூர்வமாக ஒன்றி போய்விடுவேன். படப்பிடிப்பு நடக்கும்போது திரைக்கதை அந்த வசனம் இருந்ததே அதை ஏன் படமாக்கவில்லை என்பேன். வசனத்தை ஞாபகத்தில் வைத்து இருக்கிறீர்களே என்று ஆச்சரியப்படுவார்கள்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

மேலும் செய்திகள்