“நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை” -அமிதாப்பச்சன்

சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

Update: 2019-10-03 23:32 GMT
இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு பேசும்போது, சிரஞ்சீவியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தினேன். அதை அவர் கேட்கவில்லை. இதே அறிவுரையை ரஜினிகாந்துக்கும் சொன்னேன் என்றார்.

இந்த நிலையில் மும்பையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிதாப்பச்சன் மதம் சம்பந்தமான கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

“பச்சன் என்பது எனது குடும்ப பெயர். அது எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை. குடும்ப பெயரை எனது பெயரில் வைத்துக்கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். நான் பள்ளியில் சேர்ந்தபோது எனது தந்தையிடம் குடும்ப பெயர் குறித்து கேட்டனர். அப்போது பச்சன் என்பதை குடும்ப பெயராக வைத்துக்கொள்ள அவர் முடிவு செய்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் ஊழியர்கள் எனது வீட்டுக்கு வரும்போது, உங்கள் மதம் என்ன என்று கேள்வி எழுப்புவார்கள். அவர்களிடம் நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை. எப்போதுமே இதைத்தான் சொல்லி வருகிறேன். நான் ஒரு இந்தியன் என்றுதான் கூறுவேன்.

இப்போதும் அதையே சொல்கிறேன். நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் இல்லை. தன்னை சுற்றி உள்ள மனிதர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். எனது தந்தையும் அதைத்தான் செய்வார்.” இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.

மேலும் செய்திகள்