மாறுபட்ட கதையுடன் சித்தார்த் நடித்த `டக்கர்'

சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்தி ஜி.கிருஷ் இயக்கியுள்ள புதிய படம், `டக்கர்.'

Update: 2019-12-05 22:30 GMT
ஓசையில்லாமல் தயாராகியுள்ள `டக்கர்' படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, திவ்யான்ஷா கவுசிக் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர், `மஜிலி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானவர். படத்தை பற்றி டைரக்டர் கார்த்தி ஜி.கிருஷ் சொல்கிறார்:

``அகங்காரமும், கோபமும் கொண்ட 2 கதாபாத்திரங்கள், ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது, அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை கருவாக கொண்ட படம், இது. அடிதடி படங்களில் நடித்த சித்தார்த்துக்கு இது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும்.

அவருடன் யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுதன், ஜெயராம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.''

மேலும் செய்திகள்