ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவம்: படமாகும் செம்மர கடத்தல்

ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.

Update: 2020-01-20 00:24 GMT

ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து புதிய படம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக வெற்றி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், ஜீவி ஆகிய படங்களில் நடித்தவர். படம் குறித்து வெற்றி கூறியதாவது:-

“சமீபத்தில் ஆந்திராவில் நடந்த செம்மர கடத்தல் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடிக்கிறேன். காட்டுக்குள் செம்மர கடத்தல் கும்பலில் சிக்கி எப்படி மீண்டு வருகிறேன் என்பது கதை.

செம்மர கடத்தல் எப்படி நடக்கிறது. அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் படத்தில் இருக்கும். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. பாதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்தை குரு ராமானுஜம் டைரக்டு செய்கிறார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். விறுவிறுப்பான படமாக தயாராகிறது.

‘கேர் ஆப் காதல்’ என்ற படத்திலும் நடிக்கிறேன். காதலை மையமாக வைத்து தயாராகிறது. மும்தாஜ் ஜோடியாக நடிக்கிறார். ‘வனம்’ படம் என்ற படத்திலும் நடிக்க உள்ளேன். ஸ்ம்ருதி நாயகியாக வருகிறார். பூர்வ ஜென்மத்தை மையப்படுத்தி உருவாகிறது. ‘8 தோட்டாக்கள்’ பார்த்து ரஜினிகாந்த் பாராட்டினார். ‘ஜீவி’ படத்தை விவேக் பாராட்டினார். இரண்டுமே மறக்க முடியாத பாராட்டுகள்.” இவ்வாறு நடிகர் வெற்றி கூறினார்.

மேலும் செய்திகள்