‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை

“காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது, கல்லூரி காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இரு வேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள்தான் கமலி.

Update: 2020-03-17 14:45 GMT
கமலி இந்த இரண்டையும் அடைந்தாளா? என்பதுதான் ‘கமலி ப்ரம் நடுக்காவேரி‘’. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை, இது” என்கிறார், டைரக்டர் ராஜசேகர். இவர் மேலும் கூறுகிறார்:-

“புதுமுகங்களை நம்பி, ஒரு புதுமுக இயக் குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறோம். ஆனந்தியின் நடிப்பு, படம் வந்த பிறகு எல்லோராலும் பாராட்டப் படும்.

பின்னணி இசையும், பாடல்களும் திரைக் கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார், இசையமைப்பாளர்.

கதையை கேள்விப்பட்டதும் உலக உரிமையை மாஸ்டர்பீஸ் என்கிற கம்பெனி வாங்கியது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

இதில், கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்‘ ஆனந்தி நடித்து இருக்கிறார். மேலும், புதுமுகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், பிரியதர்ஷினி, மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.”

மேலும் செய்திகள்