பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.

Update: 2020-04-29 06:55 GMT
மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53) ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர். 1988-களில் மீரா நாயர் இயக்கத்தில் வெளியான சலாம் பாம்பே படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து லைப் ஆப் பை, பிகு உள்ளிட்ட படங்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. ஷோ க்களிலும் நடித்துள்ளார். இவரது தாயார் சயீதா பேகம் வயது 85 உடல்நலக்குறைவால் ராஜஸ்தானில் கடந்த 25-ம் தேதி காலமானார். 

ஊரடங்கால் தாயின் முகத்தை காண ராஜஸ்தான் செல்லமுடியாமல் தவித்தார். பின்னர் மொபைல் வீடியோ கால் மூலம் இறுதி சடங்கை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் தாயார் இறந்த சோகத்தில் மனவேதனையடைந்த இர்பானுக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மும்பை கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு பெருங்குடலில் நோய் தொற்று ஏற்பட்டதையடுத்து ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில்  கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பெருங்குடல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  லைப் ஆப் பை, லன் ச் பாக்ஸ், ஜுராசிக் வேர்ல்ட் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் மறைவு இந்தி மற்றும் தமிழ் திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்