ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி

ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை நடிகை சுஹாசினி இயக்கி உள்ளார்.

Update: 2020-05-09 12:21 GMT
சென்னை,

நடிகை சுஹாசினி ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே ஒரு குறும்படத்தை இயக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். சின்னஞ்சிறு கிளியே என்கிற இந்த குறும்படத்தில் மலையாள நடிகை ஆஹானா கிருஷ்ணா, கோமளம் சாருஹாசன், கிருஷ்ணன் ஆகியோருடன் தானும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் சுஹாசினி.

எந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியோ லைட்டிங் வசதிகளோ இல்லாமல் ஐ போன் மூலமாக இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் சுஹாசினி. கெவின் தாஸ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, ஜேம்ஸ் வசந்தன் இந்த குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஊரடங்கு சமயத்து நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்தை  சுஹாசினி விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜானி பட சூட்டிங்கில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த படம் 1 வருடம் வரை ஓடியது. அந்தப் படத்திற்காக சுஹாசினிக்கு மாநில விருது கிடைத்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கரத்தால் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகளுக்கு முன் இந்திரா என்கிற படத்தை இயக்கிய நடிகை சுஹாசினி என்பது நினைவுகூறத்தக்கது.

மேலும் செய்திகள்