பெண்களுக்கு ஆதரவாக சமூகப் பார்வையை முன் வைக்கும் டைரக்டர்

பெண்களுக்கு ஆதரவாக சமூகப் பார்வையை முன் வைக்கும் மலையாள பட டைரக்டர் ஜியோ பேபி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

Update: 2021-03-13 10:15 GMT
சமீபத்தில் திரைக்கு வந்து அனைத்து தரப்பினரையும் தன் பக்கம் திருப்பிய மலையாள படம், ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’. படத்துக்கான எழுத்தில் இருந்து திரைக்கு சென்றது வரையான அனுபவங்களை டைரக்டர் ஜியோ பேபி பகிர்ந்து கொண்டார்.

“இந்த படத்தின் திரைக்கதையில், ஒவ்வொரு காட்சியிலும் என்ன உணர்வு பார்வையாளர்களுக்கு கடத்தப்பட வேண்டும் என்பதை மட்டும் முதலில் எழுதியிருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களின் உதவியோடு அதை மெருகேற்றினேன்.

ஆண்களால் உருவாக்கப்பட்ட இந்த சமூக அமைப்பு எப்படி பெண்களை உறிஞ்சிப் பிழைக்கிறது? பெண்களையே பெண்களுக்கு எதிராக எப்படி திருப்புகிறது? மிரட்டியும், தட்டிக் கொடுத்தும் பெண்களை எப்படி அடிமைகளாக நடத்துகிறது? என்பது பற்றியும் திரைக்கதையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தை தாண்டி, எனக்குள்ள சமூகப் பார்வையை முன்வைத்து இருக்கிறேன். படம் வெற்றி பெற இவைகளும் காரணம் என கருதுகிறேன்” என்கிறார், டைரக்டர் ஜியோ பேபி.

மேலும் செய்திகள்