தணிக்கை சான்று கிடைக்காததால் திட்டமிட்டபடி வெளியாகுமா “பராசக்தி ”?
10 ம் தேதி வெளியாக உள்ள ‘பராசக்தி’ படத்துக்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.;
சென்னை,
2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடித்திருப்பதால் இப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பராசக்தி’ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஜனநாயகன் படத்தை போலவே, ‘பராசக்தி’ படத்துக்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. சென்சாரில் படத்தை திரையிட்ட போது ‘பராசக்தி’ படத்திற்கு மொத்தம் 23 கட்கள் சொல்லி உள்ளதாகவும், குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு காட்சிகளை நீக்கவோ, அல்லது அதில் உள்ள வசனங்களை மாற்றவோ பரிந்துரை செய்துள்ளனர். அதன் பின்னர் தான் சுதா கொங்கரா மறு ஆய்வு கமிட்டிக்கு செல்ல முடிவெடுத்து, மும்பையில் படத்தை திரையிட்டு உள்ளனர். மேலும் அங்கு, இந்தி திணிப்பு எதிர்ப்பு காட்சிகளை நீக்கினாலோ, அல்லது அதில் மாற்றங்கள் செய்தாலோ, அது உண்மையாக நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் சாரத்தை பலவீனப்படுத்தும் என்று எடுத்துச் சொல்லி உள்ளார். இதனால் ‘பராசக்தி’ படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
நெதர்லாந்து நாட்டில் வெளியாக இருந்த ‘பராசக்தி’ படம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.