விமர்சனங்கள் ஒருபோதும் என்னை பாதித்தது கிடையாது - நிமிஷா சஜயன்

ஏடாகூடமான விமர்சனங்களை கண்டுகொள்வதே கிடையாது என்று நிமிஷா சஜயன் கூறியுள்ளார்.;

Update:2026-01-08 22:07 IST

கோப்புப்படம் 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் நிமிஷா சஜயன், சித்தார்த்தின் 'சித்தா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'மிஷன் சாப்டர்-1', ‘டி.என்.ஏ.' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் பிசியாக நடித்து வரும் நிமிஷா சஜயனிடம், உங்களை பாதித்த விமர்சனம் எது? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நிமிஷா சஜயன், "விமர்சனங்கள் என்னை ஒருபோதும் பாதித்தது கிடையாது. என்னை பொறுத்தவரை நல்ல விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன். தவறு என்றால் என்னை நானே மாற்றிக்கொள்வேன்.

மற்றபடி, என்னை நோக்கி வரும் ஏடாகூடமான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதே கிடையாது. அதை ஓரமாக வைத்துவிட்டு எனது அடுத்தகட்ட வேலைகளை பார்க்க தொடங்கிவிடுவேன்" என்று பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்