சினிமா துறைக்கு நல்லது நடக்கும் - நடிகர் விஷால்

நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘'ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதை வரவேற்கிறேன்.

Update: 2021-08-29 23:06 GMT
நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘'ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும். ஸ்டாலின் நன்றாக ஆட்சி நடத்துவார் என்பதால்தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர். ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசுவதால் அ.தி.மு.க.வுக்கு எதிரானவன் என்று நினைக்க வேண்டாம். நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதனால் கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவ முடியவில்லை'' என்றார். விஷால் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். குழந்தைகள் காப்பகம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று உணவும் வழங்கினார். விஷாலுக்கு நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்