தமிழ் நடிகர்களை இயக்கும் தெலுங்கு டைரக்டர்கள்

தமிழ் நடிகர்கள் படங்களை இயக்க தெலுங்கு டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கு படத்தில் விஜய் நடிக்க இருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளனர்.;

Update:2022-01-03 14:48 IST
இந்த நிலையில் தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். இதுபோல் இன்னொரு தெலுங்கு இயக்குனரானவெங்கி அட்லோரியும் தனுஷ் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது சிவகார்த்திகேயனும் தெலுங்கு பட உலகில் அடியெடுத்து வைக்கிறார். இவர் நடிக்க உள்ள படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் கே.வி. இயக்குகிறார். இவரது இயக்கத்தில் நடிப்பதை சிவகார்த்திகேயனும் தற்போது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். அனுதீப் கே.வி. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ஜிதிர்த்னலு என்ற படத்தை இயக்கி பிரபலமானவர். இது சிவகார்த்திகேயனுக்கு 20-வது படம். இந்த படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.

மேலும் செய்திகள்