இயக்குனர் அட்லி-பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..!
அட்லீ-பிரியா தம்பதிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.;
சென்னை,
தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அட்லீ கடந்த 2014- ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அட்லீ-பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் அட்லீ ,
அவர்கள் சொல்வது சரிதான்.இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை.பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது . என தெரிவித்துள்ளார்.அட்லீ-பிரியா தம்பதிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
They were right There's no feeling in the world like this ♥️
— atlee (@Atlee_dir) January 31, 2023
And just like tat our baby boy is here! A new exciting adventure of parenthood starts today!
Grateful. Happy. Blessed. ♥️@priyaatlee pic.twitter.com/jCEIHSxlKB