வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகத்தில் கவின்?

வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-05-26 16:27 GMT

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பேமிலி என்டர்டெயினராக அமைந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன் , சூரி , ஸ்ரீதிவ்யா , சத்யராஜ் , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்திற்கு வசனம் எழுதியிருந்தார் இயக்குனர் எம் ராஜேஷ். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஊதா கலரு ரிப்பன் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.

சின்னத் திரையில் இருந்து சினிமாவிற்குள் வந்த சிவகார்த்திகேயன் நேரடியாக ஆக்சன் படங்களில் இறங்காமல் காமெடியான கதைகளையே தேர்வு செய்து நடித்து வந்தார்.அப்படி அவருக்கு கைகொடுத்தப் படம் தான் வருத்தப் படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காம்போவில் முழுக்க முழுக்க காமெடி படமாக அமைந்த இப்படம் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் மற்றும் பேமிலி ஆடியன்ஸிடம் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இப்படத்தைத் தொடர்ந்து வெளியான ரஜினி முருகன் படமும் சிறப்பான வெற்றிபெற்றது.

இப்படியான நேரத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பொன்ராம் இயக்க இருப்பதாகவும் இந்தப் படத்தின் கதையை அவர் நடிகர் கவினிடம் சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு நடிக்க வந்தவர் கவின்.

இரண்டு நடிகர்களின் சினிமா கேரியரும் ஒரே மாதிரி தொடங்கி தற்போது ஒரே டிராக்கில் போய் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்சன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ள நிலையில் அவரது பாதையை பின்பற்றி கவின் இந்தப் படத்தில் நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

கவின் நடித்து சமீபத்தில் வெளியான ஸ்டார் படம் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இப்படியான நிலையில் முழுக்க முழுக்க ஒரு காமெடிபடத்தில் அவரை பார்க்க ரசிகர்கள் ரெடியாக இருக்கிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்