தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் ராஷ்மிகா - வைரலாகும் புகைப்படங்கள்
தற்போது ராஷ்மிகா இந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் பிஸியாக உள்ளார்.;
சென்னை,
சமீபத்தில் தனது தோழிகளுடன் இலங்கைக்கு விடுமுறைக்குச் சென்ற ராஷ்மிகா மந்தனா, அங்கிருந்து பல புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் பயணத்தில் அவருடன் மற்றொரு கதாநாயகி வர்ஷா பொல்லம்மாவும் சென்றிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. தற்போது அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர்.
சமீபத்தில் வெளியான தி கேர்ள் பிரண்ட் மற்றும் தம்மா படங்களின் மூலம் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. தற்போது அவர் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் பிஸியாக உள்ளார்.