எமிலி பிளண்ட்டின் 'டிஸ்குளோசர் டே' டீசர் வெளியீடு
புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 'டிஸ்குளோசர் டே' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது;
சென்னை,
ஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கும் புது படம் 'டிஸ்குளோசர் டே'. இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜூன் 12 அன்று கோடைகால பரிசாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.
இந்த டீசரைப் பார்க்கும்போது...பல தசாப்தங்களாக அரசாங்கங்களால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த முக்கியமான தகவல்கள் வெளிப்படும் ஒரு காலகட்டத்தை இந்தப் படம் பிரதிபலிக்கிறது.
'ஓப்பன்ஹைமர்' மற்றும் 'எ குயட் பிளேஸ்' போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற எமிலி பிளண்ட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், கோலின் பாரெல், ஜோஷ் ஓ'கானர் மற்றும் ஈவ் ஹெவ்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.