கவின் நடித்துள்ள 'ஸ்டார்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

'ஸ்டார்'. படத்தை இயக்குனர் இளன் இயக்கியுள்ளார்

Update: 2024-04-18 13:11 GMT

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில், ஸ்டார் திரைப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்