இரண்டாவது பாடலை வெளியிட்ட 'குஷி' படக்குழு..!

'குஷி' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான 'ஆராத்யா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update:2023-07-12 22:38 IST

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இப்படத்தின் முதல் பாடலான 'என் ரோஜா நீயே' பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'குஷி' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான 'ஆராத்யா' பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் சித் ஶ்ரீராம், சின்மயி இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்