வைரலாகும் பிரியங்கா மோகனின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா மோகன்.;

Update:2025-12-27 16:05 IST

சென்னை,

6 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பை திரில்லரான ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ என்ற கன்னட படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகை பிரியங்கா மோகன், ஹேமந்த் எம் ராவ் இயக்கும் ’666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ படத்தில் சிவராஜ்குமார் மற்றும் டாலி தனஞ்சயாவுடன் நடிக்கிறார். அவரது பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

இளவரசி போன்ற அவரது தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான 'ஓந்த் கதே ஹெல்லா' மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்