அபுதாபி இந்து கோவிலில் ரஜினிகாந்த் பிரார்த்தனை

நடிகர் ரஜினிகாந்த் அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிஏபிஎஸ் இந்து கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Update: 2024-05-25 15:09 GMT

நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படபிடிப்பை முடித்த கையுடன் ஓய்வுக்காக சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அதைப் பெற்றுக் கொள்வதற்காக அபுதாபி சென்ற நடிகர் ரஜினிகாந்த் அந்நாட்டின் காலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோல்டன் விசாவை பெற்றுக்கொண்டார். இந்த விசா கிடைக்க முக்கிய பங்கு வகித்த அவரின் நண்பரும் லுலு குழுமத்தின் தலைவருமான யூசப் அலியை சந்தித்தார். மேலும் இந்த விசாவை தனக்கு வழங்கியமைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு வீடியோ மூலம் மனமார்ந்த நன்றிகளை வீடியோ மூலம் தெரிவித்து கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது.

அதைத் தொடர்ந்து தற்போது அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஏபிஎஸ் இந்து கோயிலை நேரில் தரிசனம் செய்து வழிபட்டுள்ளார். அங்கு அவர் சுவாமி நாராயணசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கோயிலின் தலைமை அர்ச்சகரிடம் ஆசி வாங்கும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

25 ஏக்கரில் 7 கோபுரங்களுடன் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு வெள்ளை சலவை கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த கோயிலை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்