ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம்...வெளியான முக்கிய அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.;
சென்னை,
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக் வெளியான படம் 'பிளாக்மெயில்'. இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கிய இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்திருந்தார்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.