நாக சைதன்யா மனைவி வெளியிட்ட திருமண வீடியோ
திருமதியாகி ஓராண்டு நிறைவு என்று தனது திருமண வீடியோவை நடிகை சோபிதா பகிர்ந்துள்ளார்.;
நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் 2021-ம் ஆண்டில் பிரிந்தனர். பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து மீண்டும் சினிமாவுக்கு வந்த சமந்தாவும், இயக்குனர் ராஜ் நிடிமொருவும் காதலித்து வந்தனர். டிசம்பர் 1ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இவர்களது திருமணம் ரகசியமாக நடந்தது. சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் படங்களையும் வெளியிட்டிருந்தார். புதுமணத் தம்பதியினரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி 2வது திருமணம் செய்து கொண்டார்.இன்றுடன் தங்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் திருமண வீடியோவை நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் பகிர்ந்துள்ளனர்.
தனது திருமண வீடியோவை பகிர்ந்துள்ள நடிகை சோபிதா பதிவில், “சூரியனை முழுவதும் சுற்றி வந்த இந்த ஓராண்டில், தனது கணவர் நாக சைதன்யாவுடனான வாழ்க்கையில் தன்னை புதிதாக உணர்கிறேன். அக்கினியால் சுத்தமடைந்தது போன்று உணர்கிறேன். திருமதியாகி ஓராண்டு நிறைவு ” என்று சோபிதா குறிப்பிட்டுள்ளார்..
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.'மங்கி மேன்' என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.