என்னது 3 மணி நேரமா... ராஷ்மிகா படத்தின் நீளம் குறித்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ராஷ்மிகா நடித்துள்ள 'அனிமல்' படத்தின் மொத்த நீளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2023-11-18 15:39 IST

Iamge Credits : Twitter.com/AnimalTheFilm

சென்னை,

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரன் டைம் (Run Time) அதாவது படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். அதேபோல தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் இந்த செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவு பெரிய படத்தை ஒரு நாளுக்கு 4 காட்சிகள் மட்டுமே திரையிட முடியும் என்பதால் படத்தின் நேரத்தை குறைக்க கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ரசிகர்கள் சிலரும் படத்தின் நீளம் அதிகமாக இருந்தால் பார்க்கும்போது எரிச்சல் ஏற்படும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்