மீண்டும் வெளியாகும் ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'ரன் பேபி ரன்'..
இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது;
இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படம் 'ரன் பேபி ரன்'.இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரன் பேபி ரன்' திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
Get set for a thrill ride! ⚡#RunBabyRun from March 10 on #Disneyplushotstar@Prince_Pictures @RJ_Balaji @aishu_dil @jiyenkrishna @lakku76 @SamCSmusic @realradikaa @RajAyyappamv @smruthi_venkat @actorvivekpra @dopyuva pic.twitter.com/m6CwJFLI9M
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 27, 2023