மோகன் ஜியின் “திரௌபதி 2” படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள ‘திரௌபதி 2’ படம் வரும் 23ந் தேதி வெளியாகிறது.;
சென்னை,
2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை சின்மயி பாடியுள்ளார்.
இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பித்து அரியலூரில் நிறைவடைந்ததுள்ளது.
இந்த நிலையில், தணிக்கை வாரியம் ‘திரௌபதி 2’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.